திருச்சி சிறை கைதிகளால் பயிரிடப்பட்ட வெங்காயம் அறுவடை!

திருச்சி சிறை கைதிகளால் பயிரிடப்பட்ட வெங்காயம் அறுவடை!

திருச்சி மத்திய சிறையில் கரும்பு அறுவடை செய்யப்பட்ட நிலையில் தற்போது வெங்காயம் விளைச்சல் பெற்று அறுவடை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறை தோட்டத்தில் 20 சிறைவாசிகளை கொண்டு அரை ஏக்கர் வெங்காயம் பயிரிடப்பட்டது. இதற்கு மண்புழு மற்றும் கால்நடைகளின் உரங்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் வளர்ந்த இந்த வெங்காயங்களை இன்று அறுவடை செய்யப்பட்டது.

இந்த சின்ன வெங்காயத்தினை சிறை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் சிறை அங்காடி கண்காணிப்பாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டது.

அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்கள் பொதுமக்களின் நலன் கருதி வெளியில் விற்கப்படும் விலையை விட குறைவாக சிறை அங்காடியில் விற்பனையாகிறது. இதில் இருந்து வரும் இலாப தொகை சிறைவாசிகளுக்கு ஊதியமாகவும் சிறையில் பாதிக்கப்பட்டோருக்கு நலநிதியாகவும் வழங்கப்பட உள்ளது.