திருச்சியில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருச்சியில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருச்சியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கை திருச்சியில் உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.