சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க காவல் துறையினர் நவீன தொழில்நுட்பங்களை கையாள கற்று கொள்ள வேண்டும்-மத்திய மண்டல ஐ.ஜி காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க காவல் துறையினர் நவீன தொழில்நுட்பங்களை கையாள கற்று கொள்ள வேண்டும்-மத்திய மண்டல ஐ.ஜி காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை

தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி மத்திய மண்டல காவல் துறையில் முதல் முறையாக பொதுமக்கள் உடனான தொடர்பை மேம்படுத்த விர்ச்சுவல் காப் (VIRTUAL COP) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழக காவல்துறையில் பொதுமக்களுடன் உண்டான தொடர்பை மேலும் வலு சேர்க்கும் வண்ணம் தமிழக அளவில்

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் H.M ஜெயராம்,திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் (பொ) மேற்பார்வையில் இன்று திருச்சி சுப்பிரமணியபுரம்திருமாங்கல்யம் திருமண மண்டபத்தில் விர்ச்சுவல் காப் (VIRTUAL COP) என்ற செயலி தமிழக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

 இவ்விழாவில் 5 மாவட்டத்தை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என 100க்கும் மேற்பட்ட திருச்சி சரக காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ஐ.ஜி ஜெயராம்,

"தற்போது குற்றவாளிகள் புது புது யுக்திகளை கொண்டு வங்கி கொள்ளை,சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை கண்டறியவும், குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலும்காவல் துறையினர் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் "  என அறிவுரை வழங்கினார்.