போலீஸின் மகன் அடித்து கொலை-மது போதையில் நடந்த விபரீதம்

போலீஸின் மகன் அடித்து கொலை-மது போதையில் நடந்த விபரீதம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ். இவர் லால்குடி கிளை சிறைச் சாலையில் காவலராக பணியாற்றி வருகிறார். 

 தீபாவளி அன்று காவலர் ராஜேஸின் 12-ம் வகுப்பு படிக்கும் மகன் சரன்திப் மது போதையில் ஏற்பட்ட அடிதடியில் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி நீரோ ஒன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 18 வயதான நிவாஷ் யை லால்குடி போலீசார் கைது செய்தனர் . விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.