பொதுமக்கள் புகார் - ரவுகளின் பெயர் பட்டியல் தயார் - எஸ்.பி தகவல்

பொதுமக்கள் புகார் - ரவுகளின் பெயர் பட்டியல் தயார் - எஸ்.பி தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம். மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சிராப்பள்ளி மாநகர ஆணையர், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் "ஆப்ரேசன் அகழி" என்ற பெயரில் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு. 4 பெயர் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு, தற்போது முதல் பெயர் பட்டியலில் (லிஸ்ட்) உள்ளவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மேற்படி குற்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபர்களான 1. பிரபு என்ற பப்லு, 2) ஜெயக்குமார் என்ற கொட்டப்பட்டு ஜெய், 3) மைக்கேல் சுரேஷ் என்ற பட்டரை சுரேஷ், 4) டேவிட் சகாயராஜ். 5) பாலு என்ற பாலமுத்து. 6) பிரதாப் என்ற சிங்கம் பிரதாப், 7) ராஜகுமார். 8) கருப்பையா. 9) பாதுஷா என்ற பல்பு பாட்ஷா. 10) கரிகாலன். 11) கோபாலகிருஷ்ணன் என்ற தாடி கோபால், 12) சந்திரமெளலி, 13) குருமூர்த்தி மற்றும் 14) டி.டி.கிருஷ்ணன் ஆகியோர்களின் விபரங்களை சேகரித்து அதிரடியாக (19.09.2024)-ஆம் தேதி அவர்களது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 14 காவல் ஆய்வாளர்கள் தலைமையில், 14 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 42 காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு சோதனை செய்து கீழ்கண்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த (19.09.2024) மாலை துவங்கிய சோதனையானது இரவு வரை நடைபெற்றதன் முடிவில் மேற்படி நபர்களுக்கு தொடர்பில்லாத 258 சொத்து ஆவணங்களும், 68 வங்கி கணக்கு புத்தகங்களும், 75 புரோ நோட்டுகளும், 82 நிரப்பப்படாத காசோலைகளும், 18 செல்போன்களும், 84 சிம்கார்டுகளும். பிற ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கணக்கில் வராத 66 அசல் பத்திரங்களும், பாண்டிச்சேரி மது வகைகள் 31 பாட்டில்களும் இந்திய ஜனநாயக கட்சியில் (IJK) மாநில இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வரும் மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டரை சுரேஷ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன.

மேற்படி கைப்பற்றப்பட்ட 66 அசல் பத்திரங்களும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என விசாரணையில் தெரிய வருகிறது. இதுவரை நில அபகரிப்பு தொடர்பாக சேவியர் ஜெயசீலன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொட்டப்பட்டு செந்தில் மற்றும் அண்ணாமலை இருவர் மீதும் மிரட்டல் மற்றும் போலியாக நில பத்திரங்களை தயாரிப்பது. கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் பறிப்பது உள்ளிட்ட சட்டப்பிரிவுகள் மணிகன்டம் காவல் நிலையத்தில் குற்ற எண் : 133/24 u/s (191(2), 191(3), 296(b), 351(3) r/w 4 of WH Act & 25(1-B)(a) Arms Act-ன் படி வழக்கு பதிவு செய்து மேற்படி கொட்டப்பட்டு செந்திலை பிடிக்க காவல்துறையினர் கைது செய்த போது. எதிரி தப்பியோடி கீழே விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் கடந்த (19.09.2024) மற்றும் (20.09.2024) ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற "ஆப்ரேசன் அகழி" சோதனையின் போது (20.09.2024)-ஆம் தேதி வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு நடுகரை எல்லீஸ் சோதனை சாவடியில் சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக அதிவேகமாக வந்த TN 07 AM 4541 Skoda Octavia என்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரின் உள்ளே அருவாள்-1. இரும்பு வாள்-2. இரும்பு ராடு 1 போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த ஆயுதங்களுடன், காரில் இருந்த திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த சந்திரமௌலி என்ற மெளலி (39) என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொருளாளராக பதவி வகித்தவர் எனவும், எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்தது. மேலும் மேற்படி சந்திரமௌலி மீது ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்து வாத்தலை காவல் நிலையத்தில் குற்ற எண் 127/24 5.. 132, 296(b), 351(II) BNS r/w 25(a) Arms Act and 3 of PPDL Act ன்படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஆப்ரேசன் அகழியை தொடர்ந்து சரித்திர பதிவேடு குற்றவாளியும். இந்திய ஜனநாயக கட்சியில் (IJK) மாநில இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வரும் மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டரை சுரேஷ் வீட்டில் இருந்து, கணக்கில் வராத 66 அசல் பத்திரங்களும். பாண்டிச்சேரி மது வகைகள் 31 பாட்டில்களும், கைப்பற்றப்பட்டன. மேலும் அவரது மாட்டு கொட்டகையில் இருந்து சுமார் 1 3/4 அடி நீளமுள்ள வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. மேற்படி கைப்பற்றப்பட்ட 66 அசல் பத்திரங்களும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும். கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து திருவெறும்பூர் காவல் நிலைய குற்ற எண். 414/24 u/s 25(1A) Arms Act and 4(1)(c) TNP Act-ன் படி வழக்கு பதிவு செய்து எதிரியை தேடிவந்த நிலையில், கடந்த (21.09.2024)-ஆம் தேதி பட்டரை சுரேஷின் மாட்டு கொட்டகையில் ஆயுதங்களுடன் இருந்த 1) கமல் (எ) குமார், கீழபாண்டமங்கலம், 2) ராமதாஸ், நவலூர் குட்டப்பட்டு ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர். மேலும் ஆப்ரேசன் அகழியில் தலைமறைவாக இருந்து வந்த எதிரிகளை தேடப்பட்டு வந்தபோது பட்டரை சுரேஷ் என்பவர் பாண்டிச்சேரியில் TN81 AY 1010 என்ற XUV 700 Mahindra காரில் திருச்சிக்கு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் கடந்த (23.09.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இன்று (27.09.2024) ஆப்ரேசன் அகழியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்துவரும் சாத்தனூர் அண்ணாமலை தொடர்புடைய அலுவலகம், அண்ணாமலையின் பினாமி சாத்தனூர் ராஜ்குமார். அண்ணாமலையுடன் திருமணம் கடந்த உறவில் இருந்துவரும் கே.கே. நகர் திருவள்ளுவர் தெருவில் வசித்துவரும் மீனாட்சி ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் தனிப்படையினர் சோதனை செய்தபோது, சாத்தனூர் ராஜ்குமார் வீட்டில் அவருக்கு சம்மந்தம் இல்லாத 17 பத்திர ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் மீனாட்சி என்பவரின் வீட்டில் சம்மந்தம் இல்லாத 10 பத்திர ஆவணங்களும், 70 சவரன் நகை, மற்றும் ரூ.18,92,750/-கணக்கில் வராத பணம் இருந்ததால், திருச்சிராப்பள்ளி வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்து, வருமான வரித்துறையின் Senior Tax Assistant முத்தலீவ், என்பவரது தலைமையிலான வருமானவரித்துறையினர், மேற்படி பணம், நகை மற்றும் ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

மேலும் ஆபரேஷன் அகழி தூவங்கும் போது ஒரு பெயர் பட்டியல் (லிஸ்ட்) தான் இருந்தது. ஆனால் பத்திரிக்கையில் வந்து செய்தியின் காரணமாக ஏற்பட்ட விழிப்புணர்வால் நிறைய மனுதாரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை அணுகியுள்ளனர். குறிப்பாக புதன்கிழமை குறை தீர்ப்பு முகாமில், பெற்ற மனுக்களின் தகவலின் அடிப்படையில் 2, 3 மற்றும் 4-வது பெயர் பட்டியல் (லிஸ்ட்) தயார் செய்யப்பட்டு சோதனைக்கான ஆயத்த பணிகளும் தற்போது நடைபெற்றுவருகிறது.

மேலும் ஆப்ரேசன் அகழியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்துவரும் எதிரிகளை தனிப்படை அமைத்து விரைந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாக மிரட்டினாலோ அவற்றை ஆடியோ. வீடியோ. CCTV ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், அவர்களின் உதவி எண். 97874 64651 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.