காணாமல் போன குழந்தையை 2 மணி நேரத்தில் மீட்ட திருச்சி மாவட்ட காவல்துறை

காணாமல் போன குழந்தையை 2 மணி நேரத்தில் மீட்ட திருச்சி மாவட்ட காவல்துறை


 
விழுப்புரம் மாவட்டம்  அரங்கூறைச் சேர்ந்த சங்கர் என்பவர் கூலி வேலைக்காக தனது குடும்பத்தினருடன்  தொட்டியம் பேருந்து நிலையத்தை இன்று காலை சுமார் 9 மணியளவில் வந்தடைந்தனர். பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச் செல்ல இருந்ததால், அவர்களின் குழந்தையான மஞ்சமாதா-வை (வயது 8) அருகில் இருந்த ஒரு கடையில் அமர்த்திவிட்டு சென்றனர்.. பிறகு பொருட்களை வாங்கிவிட்டு கடைக்குச் சென்று பார்க்கும் பொழுது குழந்தையை காணவில்லை. அப்போது தொட்டியம் கடைவீதியில் பணியில் இருந்த RACE 20 காவலர் திரு.ராஜ்குமார்  தக்க சமயத்தில் துரிதமாக செயல்பட்டு காணாமல் போன குழந்தையை 2 மணி நேரத்தில் மீட்டு காவல் ஆய்வாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் நல்ல முறையில் ஒப்படைத்தார். 

குழந்தையை தாயிடம் ஒப்படைத்த பொழுது அந்த தாயின் கண்களில் வந்த கண்ணீரைக் கண்ட பொதுமக்கள் காவலரை வெகுவாக பாராட்டினர்.