விரைந்து நடக்கும் நெல் கொள்முதல்- திருச்சி விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து முறையாக நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் வரை விவசாயிகள் நெற்பயிர்களை விவசாயம் செய்திருந்தனர். அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை தற்போது கொள்முதல் நிலையங்களில் கொடுத்து வருகின்றனர்.

ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் ஒரு மூட்டைக்கு 40 கிலோ நெல் வீதம், அரசு நிர்ணயித்த படி 800 மூட்டைகள் முறையாக கொள்முதல் செய்யப்படுவதாகவும், விவசாயிகள் கொடுக்கும் நெல், முறையாக கொட்டி வைத்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் தார்பாய் மூலம் மூடப்பட்டுள்ளதால், மழையில் நனையாமல் நெல்மணிகள் பாதுகாப்புடன் இருப்பதாகவும்,

பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து வரும் குற்றச்சாட்டுக்களை போல் இங்கு இல்லாமல், உடனுக்குடன் நெல்மணிகளை கொள்முதல் செய்யப்படுவதோடு, ஒரு வாரத்தில் அதற்குரிய தொகையும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால், மகிழ்ச்சியுடன் விளைவித்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கின்றனர் விவசாயிகள்.