திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சி வந்த பட்டுகோட்டையை சேர்ந்த முகமது ஆசிக் என்பவரிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்பொழுது தங்கத்தை உடையில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. 

அவரிடம் இருந்து 46 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 905.500 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.