திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 1கோடியே 25 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபையிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஜீன்ஸ் பேன்ட்ல் வைத்து கடத்தி வந்த தங்கத்தை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது துபையில் இருந்து வந்த அதிராம பட்டினத்தை சேர்ந்த ஹாஜி முகமது மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த அசாருதீன் இருவரின் உடமைகளை சோதனை செய்தனர் .ஜீன்ஸ் பேண்டில் மறைத்துவைத்திருந்த தங்கத்தை பறிமுதல் செய்து கைப்பற்றினர்.

 இரண்டரை கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ஒரு கோடியே 25 லட்சத்து ரூபாய் என . இருவரையும் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.