தீபாவளி குப்பைகளை சிறுகுழந்தைகள் சுத்தம் செய்து நெகிழ வைத்த காட்சி

தீபாவளி  குப்பைகளை சிறுகுழந்தைகள் சுத்தம் செய்து நெகிழ வைத்த காட்சி

தீபாவளி பண்டிகை கடந்த  14ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தமிழக அரசு காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் வெடி வெடிக்க அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் பட்டாசுகளை சாலையில் வைத்து  வெடித்தனர். 14ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2நாட்கள் விடுமுறை நாட்கள் .

இன்று மூன்றாவது நாளாக குப்பைகள் சாலைகள் இருந்ததால்  தூய்மைப் பணியாளர்களுக்காக காத்திருக்காமல் திருச்சி தில்லைநகர் ஏழாவது கிராஸ் பகுதியில் உள்ள சிறு குழந்தைகள் தாங்களே அந்த குப்பைகளை சுத்தம் செய்யும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. தெருவில் இருந்த வெடி வெடித்த குப்பைகளை துடைப்பான்களை வைத்து தாங்களே சுத்தம் செய்து அனைவரையும் நெகிழ செய்தனர் .

ஒவ்வொருவரும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இச் சிறுவர்களின் செயல் மூலம் பொது மக்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வு பாடமாகவே  அமைந்தது.