சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் சூரரைப்போற்று திரைப்படம் தனியார் மண்டபத்தில் திரையீடு

சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் சூரரைப்போற்று திரைப்படம் தனியார் மண்டபத்தில் திரையீடு

கொரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று (11.11.2020) இரவு 10 மணியளவில் அமேசான் ப்ரைம் என்னும் OTT தளத்தில் சூரரைப்போற்று திரைப்படம் வெளியானது.

இதனை முன்னிட்டு இன்று (12.11.2020) காலை 9 மணியளவில் தக்க முன்னேற்பாடுகளுடனும் முறையான பாதுகாப்புகளுடனும் திருச்சி மாநகர தலைமை சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில், மாநகர தலைவர் S.M. சரவணன், செயலாளர் குடமுருட்டி புஷ்பராஜ், பொருளாளர் மைதீன் ஆகியோர் தலைமையில், தனியார் உணவக மண்டபத்தில் அமேசான் ப்ரைம் OTT தளத்திலிருந்து நேரடியாக சூரரைப்போற்று திரைப்படம் திரையிடப்பட்டு திரையரங்க முதல் நாள் முதல் காட்சி போல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Advertisement

இந்நிகழ்வில் மாநகர துணை செயலாளர் நாகு, திருவரங்கம் தொகுதி மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.