வந்துட்டேன்னு சொல்லு! திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! நான்கு வருடங்களுக்கு பிறகு சேவல் சண்டை:

வந்துட்டேன்னு சொல்லு! திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! நான்கு வருடங்களுக்கு பிறகு சேவல் சண்டை:

தமிழர் திருநாளில் கிராமப்புறங்களில் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் தான் வளர்க்கும் ஆடு மாடு கோழி குதிரை இவைகளை போட்டிகளில் பங்கேற்க வைத்து வெற்றியை சுவைக்க தமிழர்கள் ஆரம்பகாலம் முதலே விரும்பி வந்தனர். ஆடுகளம் படம் சேவல்சண்டை என்னவென்பதை காண்பித்து இருக்கும். அதே போல தான் சேவல்கட்டு என்றாலே கரூர் மாவட்டம் பூலால்வலசு கிராமம்தான் பிரபலமானது.
நூற்றாண்டு காலமாக சேவல்கட்டு இங்கு நடைபெறுகிறது
. சேவல்களில் பல ரகங்கள் இருந்தாலும் அதை சண்டைக்காக இந்த சேவல் தயாராகும் என்று பார்த்துதான் அவைகளை வளர்த்து சண்டைக்கு விட்டு அதன் மூலம் வெற்றி கண்டு மகிழ்ச்சி காணுவதை கிராமப்புறங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக சேவல்கட்டு எனும் சண்டசேவல்களை சண்டைக்கும் விடும் போட்டி நடத்தப்படாமல் இருந்தது இந்த வருடம் சண்டசேவல்களை களத்தில் இறக்க கிராமப்புற இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். தன் பிள்ளைகள் போல பார்த்து பார்த்து உணவு கொடுத்து சண்டை சேவல்களை உறுதியான உடலுடன் களத்தில் இறங்கி வெற்றியை காண வேண்டும் என துடிக்கும் தனது எஜமானின் எண்ணத்தை நிறைவேற்ற தயாராக இருக்கிறது சண்டை சேவல்கள். போட்டிக்கு முன் நீச்சல் பயிற்சி அதுமட்டுமில்லாமல் வாரம் வாரம் அப்பகுதியிலேயே சேவல்களை வைத்து சண்டைக்கு விட்டு பழக்கும் விதம் ஆகியவற்றைப் பார்க்கும் பொழுது எப்பொழுது இந்த சேவல்கள் களத்தில் இறங்க போகிறது என்று அனைவரும் வியப்பி ஆழ்த்தி உள்ளது . காயம் அடைந்தால் அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு சுற்றிலும் சோர்வடையும் சேவலை தண்ணீர் காயத்திற்க்கு சிகிச்சை கொடுத்து மீண்டும் புது தெம்புடன் களத்தில் இறங்கி எதிர்முனையில் இருக்கும் சேவல்யை வெற்றிபெற என்ன நுணுக்கங்களை கையாள வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் சொல்லிக்கொடுத்து தயார் படுத்துகின்றனர். அதற்கு தேவையான உணவு கம்பு சோளம் முந்திரிபருப்பு பாதாம் பிஸ்தா உள்ளிட்ட விலை கொடுத்து அதிகபட்சம் ரகங்களை பொறுத்து 2 அடி உயரம் வரை வளர்கின்றன.

சண்டை சேவல்களில் பல ரகங்கள் உள்ளது மயில் ,கீறி,செம்ப, காகம் ,வல்லு,கோழி மயில் ஆந்தை மயில் என 20க்கும் மேற்பட்ட சேவல் ரகங்கள் உள்ளது .குறைந்தபட்சம் சேவல் ஒரு அடியிலிருந்து 2 அடி உயரம் வரை இருக்கும்.

திருச்சி வயலூர் சேர்ந்த அருள் முருகன் கிட்டத்தட்ட அதிகமான பரிசுகளை வென்ற பேர்டு வகை சேவல்யை மிகவும் செல்லமாக வளர்த்து வருகிறார். இதே போல் இவர்கள் சேவல்கட்டு சண்டைக்காக விடுவதற்காக வளர்க்கும் நிலையில் மற்றொருவர் அழகுக்காக எந்த சண்டைக்கும் விடாமல் அழகுக்காக சேவலை வளர்ப்பதாக குறிப்பிடுகிறார் .இவ்வளவு ரகங்களை கொண்ட சண்டை சேவல்கள் 2,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாய் அதற்கு மேலாகவும் விற்பனை செய்யப்படுகிறது அதையும் தாண்டி பரிசுகளை அதிகம் என்ற சேவல்கள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்டது என பெருமைபட கூறுகின்றனர்.

மொத்தத்தில் தமிழர்திருநாள் என்றாலே மனிதர்களுக்கான போட்டி அது விளையாட்டுப் போட்டியாக இருக்கட்டும் சிலம்பம் கபடி உள்ளிட்ட போட்டிகள் என பல்வேறு வகையான நடைபெற்றாலும் தான் செல்ல செல்லமாக வளர்க்க கூடிய ஆடு மாடு கோழி குதிரை இவைகளை பந்தயத்திற்கு போட்டியில் வைத்து வெற்றி கண்டு மகிழ்ச்சி காணுவது அது ஒருவிதமான கர்வத்துடன் கூடிய மகிழ்ச்சி மனதில் வரும் என்கின்றனர்.