மாநகராட்சி சாலையில் 4அடி பள்ளம் வெட்டி போக்குவரத்தை தடை செய்த தனிநபர்

மாநகராட்சி சாலையில் 4அடி பள்ளம் வெட்டி போக்குவரத்தை தடை செய்த தனிநபர்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் 29வது வார்டு திருவள்ளுவர் நகர் மாரியம்மன் கோயில் அருகே பொதுமக்கள்  வீட்டிற்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் பெரிய பள்ளத்தை வெட்டி வீட்டுக்கு போக முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 தனியார் கோயில் ஒன்று உள்ளது அதனை நிர்வகித்து வரும் குமார் என்பவர் திடீரென நேற்று ஜேசிபி வாகனத்தை வைத்து நான்கடி அளவுக்கு மிகப் பெரிய பள்ளத்தை சாலையின் குறுக்கே வெட்டியதால் அப்பகுதியில் செல்லக் கூடிய பொதுமக்கள் அனைவரும் செல்ல முடியாமல் தவித்தனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளவர் குமார்

புகாரின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் வந்து கேட்டபோது அவர் வெட்டிய பள்ளத்தை மூட நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . இவர் இப்பகுதியில் மாநகராட்சியின் 40 அடி சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

தொடர்ந்து அப்பகுதியில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் பொதுமக்கள் செல்ல கூடிய  சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு தனி நபர் ஒருவர் சாலையின் குறுக்கே 4 அடி பள்ளத்தை வெட்டி பொதுமக்களின் போக்குவரத்தை தடை செய்துள்ள அத்துமீறலுக்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.