அரசு பள்ளியா இது! ஆச்சரியப்படுத்தும் திருச்சி பள்ளியின் ஸ்பெஷல் ஸ்டோரி!

அரசு பள்ளியா இது! ஆச்சரியப்படுத்தும் திருச்சி பள்ளியின் ஸ்பெஷல் ஸ்டோரி!

பொதுவாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் அனைவருமே அரசுப்பள்ளிகளை விரும்புவதில்லை என்பதே நிதர்சனம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள்தான் அரசு பள்ளியை பெரும்பாலும் நாடி செல்கின்றனர். ஏன் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூட தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு தான் அனுப்பி வைக்கின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் திருச்சியில் அரசு பள்ளியா இது! என ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது அதனைப் பற்றிய விரிவான தொகுப்பை இங்கு காண்போம்.

திருச்சி மாவட்டம் இடமலைப்பட்டி புதூரில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. குழந்தைகளின் கல்விமுறை, ஒழுக்கம், குறிப்பாக சீருடை, சுத்தம் என அனைத்திலும் அசத்தி வருகின்றனர் அரசு பள்ளி மாணவர்கள். இங்கு படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களே தங்கள் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படுகின்றனவா! என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அத்துனை வசதிகளையும் செய்து தருகிறது இந்த அரசு பள்ளி.

இத்துணை உதவிகளையும் செய்து அரசுப் பள்ளி அனைவருக்கும் முன்னுதாரணமாக மாற்றிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டி புதூர் ஆசிரியர் லதா பாலாஜி தான். அவர்கள் கூறியதாவது…. “முகநூல் மூலம் பெற்று பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன். சீருடைகள், பரிசுப்பொருட்கள், குழந்தைகள் தினவிழா வாழ்த்து அட்டைகள், தீபாவளி மற்றும் பொங்கல் விழாக்களில் ஏழைக்குழந்தைகளுக்கு புத்தாடைகள், நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள், ஏழைக்குழந்தைக்கு கல்வி உதவித்தொகை போன்ற உதவிகளை முகநூல் மூலம் பெற்று செய்து வருகிறேன்.

இன்றைய கால கட்டத்தில் முக நூலா என முகம் சுளிக்கும் மனிதர்களின் மத்தியில் முகநூல் நல்லதும் என்று என கூறும் நேரத்தில் முகநூல் மூலம் எண்ணற்ற உதவிகளை பெற்று உள்ளேன். நீண்ட நாட்களாக மனதில் ஒர் எண்ணம் மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளி போன்று நம் குழந்தைகளும் வாரம் ஒரு நாள் சிறப்பு ஆடை அணிந்து வந்தால் அழகாக இருக்கும் என எண்ணினேன் .அதன்படி முகநூல் நண்பர்களிடம் ஒரு ஆடையின் விலையைக்கூறி தங்களால் முடிந்த எண்ணிக்கையில் உதவி செய்ய கோரினேன்
அதன் படி கடைக்காரரின் வங்கி எண்ணை அனுப்பினேன். சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சீருடைகள் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தது.

சுமார் 407 மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் இது போன்ற சீருடையை அணிந்து வருவதால் குழந்தைகளின் முகத்தில் ஒரு அளவில்லா மகிழ்ச்சியையும், பெற்றோர்களுக்கு தங்களுடைய குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்கின்றனவா! என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு சிறந்த நடைமுறைகளை ஏற்படுத்தி வருகின்றார் தொடக்கப்பள்ளி ஆசிரியை. சமூக வலைதளம் என்பது நன்மையும் தீமையும் அடங்கிய ஒன்று அதனை நல்வழியில் பயன்படுத்தி 407 குழந்தைகளுக்கும் வாழ்வில் ஒளியேற்றிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.