நீதிமன்ற தீர்ப்பு வியாபாரிகளுக்கு சாதகமாக வராத பட்சத்தில் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் போராட்டம். விக்கிரமராஜா எச்சரிக்கை.

நீதிமன்ற தீர்ப்பு வியாபாரிகளுக்கு சாதகமாக வராத பட்சத்தில் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் போராட்டம். விக்கிரமராஜா எச்சரிக்கை.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அச்சங்கத்தின் மாநில தலைவராக விக்கிரமராஜா மற்றும் மாநில பொதுச்செயலாளராக கோவிந்தராஜூலு ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா.... காந்தி மார்க்கெட்டில் விவகாரத்தில் தனி நபர் ஒருவர் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் காந்தி மார்கெட் மீண்டும் திறக்கப்படாமல் உள்ளது. தமிழக அரசு தலையிட்டு வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து வியாபாரிகளுக்கு சாதகமான தீர்ப்பு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். காந்தி மார்கெட்டை திறக்க வலியுறுத்தி இன்று மாலை முதல் திருச்சியில் உள்ள காய்கறி, பழ மார்க்கெட்டுகள் முழுமையாக அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சி மார்க்கெட் மட்டும் தான் மூடப்படுவதாக தமிழக அரசு மெத்தனம் காட்டாமல், தமிழகம் முழுவதும் கடையடைப்பு ஈடுபட தமிழக வியாபாரிகள் தயார் நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காந்தி மார்கெட் தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வியாபாரிகளுக்கு சாதகமாக வராத பட்சத்தில் தமிழகம் முழுதும் வியாபாரிகள் போராட்டம் நடத்துவோம். கடையடைப்பு போராட்டத்தால் வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கும் தான் பாதிப்பு. எனவே அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் இக்கூட்டத்தில், மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்ததற்கு வரவேற்பு அளிப்பது, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காலக்கெடு முடிந்த சுங்க சாவடிகளை அகற்றிட வேண்டும், வேளாண் விளை பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.