கடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார பணியாளர்கள் மற்றும் 4 லாரிகள் அனுப்பி வைப்பு

கடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார பணியாளர்கள் மற்றும் 4 லாரிகள் அனுப்பி வைப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் பணிபுரியும் 100 சுகாதார பணியாளர்கள் நாகை மற்றும் கடலுார் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

புயல் கரையை கடந்தப்பின் சுகாதார பணிகளை மேற்கொள்ள தூய்மைப் பணியாளர்கள், சுகாதார ஆய்வர்,  சுகாதார மேற்பார்வையாளர்கள், மின்பணியாளர்கள் மற்றும் நான்கு டிப்பர் லாரிகள்  கடலோர மாவட்டமான கடலூர் மற்றும் நாகைக்கு  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் திரு. சு.சிவசுப்பிரமணியன் இன்று (24.11.2020)அனுப்பிவைத்தார். இந்நிகழ்வின் போது,  நகர்நல அலுவலர் திருமதி.  டாக்டர்.யாழினி ,உதவிஆணையர்கள் திரு. திருஞானம், திரு.சண்முகம் மற்றும் பலர் உடன் உள்ளனர்