சட்டத்தை மதிக்கும் நாளில் சமூகத்தையும் மதித்த திருச்சி திருவெறும்பூர் காவல்துறையினர்:

சட்டத்தை மதிக்கும் நாளில் சமூகத்தையும் மதித்த திருச்சி திருவெறும்பூர் காவல்துறையினர்:

திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கொடியேற்றி, வீரவணக்கம் செலுத்தி குடியரசு தினத்தை கொண்டாடிய காவலர்கள்.71 ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொது விழாக்கள் என பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளின் மூலம் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்வகையில் இன்று திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் இணைந்து, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.திருவெறும்பூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில்  20க்கும் மேற்பட்ட காவலர்கள் இணைந்து தேசியக்கொடிக்கு வீர வணக்கம் செலுத்தினர்.

குடியரசு தினமான இன்று பிளாஸ்டிக்கை தவிர்க்கும் நோக்கத்தோடு, சணல் பைகளை அனைவருக்கும் வழங்கி, பிளாஸ்டிக் இல்லாத சமூகம் உருவாக்க வேண்டுமென்று உறுதி ஏற்றனர்.நாம் 24 மணி நேரமும் பாதுகாப்புடனும், அமைதியுடனும் வாழ்வதற்கு காவலர்களுடைய பணிதான் காரணம்.

இத்தகைய சமூகப் பணி செய்யும் காவலர்கள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று உறுதியேற்றதோடு, மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது வரவேற்பை பெற்றுள்ளது.

இத்தகைய சமூக சிந்தனைக்காக திருவெறும்பூர் காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.