திருச்சி BSNL வளாகம் தனியாருக்கு வாடகைக்கு விடப்படும் -அறிவிப்பு- பரபரப்பு 

திருச்சி BSNL வளாகம் தனியாருக்கு வாடகைக்கு விடப்படும் -அறிவிப்பு- பரபரப்பு 

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் திருச்சி மண்டல முதன்மை மேலாளர் அலவலக வளாகம் பாரதியார் சாலையில் இயங்கி
 வருகிறது.

மிகவும் பரபரப்புடன் காணப்படும் இந்த அலுவலகம் 7 மாவட்டங்களுக்கு முதன்மையான அலுவலகமாக இயங்கி வந்தது . ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இதில் பணிபுரிந்து வந்தனர். தற்பொழுது நூற்றுக்கணக்கில் மட்டுமே இந்த அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

இந்நிலையில் Bsnl வளாக 
இடம் தனியாருக்கு வாடகைக்கு விடப்படும்.
இதற்கான அறிவிப்பு பலகை அலுவலக வளாகத்தில் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ₹ 5 கோடிக்கு மேல் மொத்த வர்த்தகம் செய்யும் தனியார், அரசு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட திட்டம் என கூறப்படுகிறது.


ஏற்கனவே ஆட் குறைப்பு, 4G சேவை இல்லாமை உள்ளிட்டவற்றால் நலிவடைந்து வரும்  பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் வளாகத்தை தனியாருக்கு விட தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவியுள்ளனர்