திருச்சியின் தர்பார் பேபி!

திருச்சியின் தர்பார் பேபி!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.பல இடங்களில் நள்ளிரவு காட்சி மற்றும் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.ரஜினிகாந்த் படம் ரிலீசாகிறது என்றாலே தியேட்டர்களில் திருவிழாக் கோலம் களை கட்டும். நாளை சோலோ ரிலீசாக தர்பார் படம் வெளியாகவுள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களும் தர்பார் கொண்டாட்டத்துக்கு ரெடியாகி வருகின்றன.

இந்நிலையில் திருச்சியில் தர்பார் பேபியாக வலம் வருகிறார் சமிஸ்கா தேவிஸ்ரீ. ஆருத்ரா- சரண்யா இவர்களின் குழந்தை சமிஸ்கா தேவிஸ்ரீ. கமலா நிகேதன் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். தர்பார் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் அளவில் நடித்துள்ளார்.

ஆருத்ரா என்பவர் திருச்சியின் மாபெரும் குறும்பட இயக்குனரும், முதல் இடம் நோக்கி, 93 நாட் அவுட், என்ற வெற்றி குறும்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.