NSSல் திருச்சியின் முதலிடம் பிடித்த கல்லூரி!

NSSல் திருச்சியின் முதலிடம் பிடித்த கல்லூரி!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு 160 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆண்டுதோறும் சிறந்த NSS கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல இந்த வருடத்திற்கான சிறந்த NSS கல்லூரிக்கான விருதினை திருச்சி கருமண்டபம் தேசிய கல்லூரி பெற்றது. தேசிய கல்லூரியின் NSS படையினர் பற்றி வெறும் வாய் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எந்த ஒரு நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றாலும் அதற்கான வரவேற்பை தெறிக்க விடும் அளவிற்கு தேசியப் படையினர் செய்வது போலவே இவர்களுடைய பயிற்சி இருக்கும்.

Advertisement

சமீபத்தில் நடந்த நூற்றாண்டு விழாவில் கூட துணை ஜனாதிபதியின் வரவேற்பு என்பது மிகச்சிறந்த அளவில் வரவேற்கப்பட்டது இந்த படையினரின் பெரும் வெற்றி.

இதுகுறித்து தேசிய கல்லூரி உடற்கல்வி துறை பிரசன்ன பாலாஜி அவர்கள் கூறுகையில் “உண்மையிலேயே மிகவும் பெருமையாக இருக்கிறது. எங்கள் கல்லூரிக்கு இந்த விருதினை பெரிய விருதாக கருதுகிறேன்.பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் எங்கள் கல்லூரி முதலிடம் வந்திருப்பது இப்படையினரின் பெரும் முயற்சியே அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.