திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழப்பு!

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழப்பு!

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர்.

திருச்சி மலைக்கோயில் பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் மற்றும் மருங்காபுரி பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் என இருவர் உயிரிழப்பு.

தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் திருச்சி மாவட்டத்தில் அதிகரித்துவருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூரை பொறுத்தவரை கொரோனா சிகிச்சை பெற்றவர்களில் பலி எண்ணிக்கை 3 உயர்ந்துள்ளது.