திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்..  பொதுமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்-  மாநகர காவல் ஆணையர் தகவல்

திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்..  பொதுமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்-  மாநகர காவல் ஆணையர் தகவல்

திருச்சி மாநகரத்தில் தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாநகர காவல் ஆணையர் சில வழிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

அதில் குறிப்பாக, 

"தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தைக் கொண்டும் எவ்வித வாகனமும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது, பேருந்துகளை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே பயணிகளை இறக்கி ஏற்றவேண்டும் , சிக்னல்களில்  பயணிகளை இறக்கி ஏற்றக்கூடாது ,வேன் கார் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்தவேண்டும் ,தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து விற்பனை செய்யக்கூடாது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், 

"பட்டாசு வியாபாரம் செய்ய அனுமதி பெற்ற இடத்தில் மட்டும் தான் விற்பனை செய்யப்பட வேண்டும், தரைக்கடை  மற்றும் தள்ளுவண்டி வைத்து பட்டாசு விற்பனை செய்யக்கூடாது, மேற்படி விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். 

மேலும் இதற்காக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 மற்றும் மாநகர காவல் ஆணையர் வாட்ஸ்அப் எண் 96 26 27 3399 இந்த எண்ணில் புகார்களை தெரிவிக்க கேட்டுக் கொண்டுள்ளார். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக திருச்சி மாநகரில் நாளை 11.11.2020 முதல் 17.11.2020 வரை தஞ்சை புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது. தஞ்சாவூர் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் சோனா மீனா திரையரங்கு அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் இருந்து இயக்கப்பட உள்ளது .புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் மன்னார்புரம் ரவுண்டானாவில் இருந்து இயக்கப்பட உள்ளது. 

தென் மாவட்டங்கள்மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்தில் இருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பேருந்துகள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும். மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்து வழித்தடங்களில் எவ்வித மாற்றமும் இன்றி வழக்கம்போல் மத்தியப்பே நிலையத்தில் இருந்த இடத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சுற்றுப் பேருந்துகள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது தற்காலிக பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி மூலம் நிழற் குடை ,குடிநீர், பொது கழிப்பிட வசதி, ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கவும்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.