நடந்தாய் வாழி காவிரி! திருச்சியில் பூஜை போட்டு விதைநெல், மலர்கள் தூவி காவிரி நீரை வரவேற்பு!!

நடந்தாய் வாழி காவிரி! திருச்சியில் பூஜை போட்டு விதைநெல், மலர்கள் தூவி காவிரி நீரை வரவேற்பு!!

திருச்சி முக்கொம்பிற்க்கு வந்த காவிரி நீருக்கு பூஜை போட்டு விதை நெல்,மலர் களால் தூவி வரவேற்றனர்.

கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீரானது தற்போது திருச்சி முக்கொம்யை வந்தடைந்துள்ளது. முதலில் ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் திறக்கப்பட்ட 10 ஆயிரம் கன அடி நீரும் மாலை வந்தடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பாஸ்கரன் தலைமையில் அதிகாரிகள் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் சிறிய பூஜைகள் செய்து காவிரி நீரை வரவேற்பு நிகழ்ச்சியில் ஈடுபட்டுனர்‌.

திருச்சி முக்கொம்பிற்க்கு வந்த காவிரி நீருக்கு பூஜை போட்டு விதை நெல்,மலர் களால் தூவி வரவேற்றனர்.பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரி செயற்பொறியாளர் பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கொள்ளிடம் புதிய கதவணை கட்டுவதால் விவசாயத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏற்கனவே கொள்ளிடத்தில் தண்ணீரை தடுத்து வைக்க கூடிய தடுப்புகள் பணி முழுவதும் முடிவடைந்து விட்டது .அதேபோல் பெருவளை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் .

அந்த கைப்பிடி சுவர் இந்த வாரத்தில் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார் .குடிமராமத்து பணி மூலம் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணி 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வருகிற 20ஆம் தேதி முழுமை பெறும் எனவும் தெரிவித்தார்.