செல்போன் விபரீதம்‌ - செவிலியர் தூக்கிட்டு மரணம்!

செல்போன் விபரீதம்‌ - செவிலியர் தூக்கிட்டு மரணம்!

திருச்சி பாலக்கரை தர்மநாதபுரத்தைச் சேர்ந்தவர் இருதயராஜ் இவருடைய மனைவி நிர்மலா. இவர்களின் மகள் மீகா(20). திருச்சி தனியார் கல்லூரி ஒன்றில் நர்சிங் படித்து வந்துள்ளார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த நிலையில் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவர்களுடைய பெற்றோர்கள் மீகாவை கண்டித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று உறவினர் ஒருவரின் திருமண விழா காரணமாக இவருடைய பெற்றோர்கள் திருமணத்திற்கு சென்று உள்ளனர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மீனாவின் அறை பூட்டியிருந்தது.‌ அழைத்து பார்த்து பதில் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அழைத்து கதவை உடைத்து பார்த்தபோது மீகா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

Advertisement

மேலும் பாலக்கரை போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போன் அதிக நேரம் பயன்படுத்தியதால் பெற்றோர்கள் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.