செயின் இல்லாத சைக்கிள் - இந்தியாவிலேயே முதன்முறையாக தயாரித்து அசத்தும் நம்ம திருச்சி!!

செயின் இல்லாத சைக்கிள் - இந்தியாவிலேயே முதன்முறையாக தயாரித்து அசத்தும் நம்ம திருச்சி!!

நம்முடைய தாத்தாக்களின் காதல் வாகனமாக இருந்து வந்த மிதிவண்டிகள் காலப்போக்கில் உடற்பயிற்சி சாதனமாக மாறிவிட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை. கடந்த 30 – 40 வருடங்களுக்கு முன்பு சைக்கிள், போக்குவரத்து மிக முக்கியச் சாதனமாக இருந்த வந்தது. இன்று கார் வைத்திருப்பவர்கள் கூட அக்காலத்தில் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு சமமானவர்களாக கருதப்பட்ட காலம் அது.ஆனால் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக இருசக்கர வாகனம் சாலைகளை ஆக்கிரமித்து கொள்ள, சைக்கிள் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்து, ஒரு கட்டத்தில் சைக்கிள் ஏழைகளின் வாகனம் என்ற பிம்பம் உருவாகியது.

இன்றோ சைக்கிள் பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாக மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது.
மிதிவண்டி ஓட்டுவதால் உடல் எடை குறைகிறது. சுற்றுச்சூழல் மாசு அடைவதில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது என்றாலும் கூட தற்போதைய அவசர யுகத்தில் பெரும்பாலோனோர் சைக்கிள்களை பயன்படுத்துவதில்லை. ஆனாலும் உடற்பயிற்சி கருவியாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சைக்கிளை கொண்டாடும் வகையில்
56 நாடுகள் ஆதரவுடன் ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி உலக மிதிவண்டி தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

தற்போது நம்முடைய திருச்சியில் செயின் இல்லாத சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டு இந்திய அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இது குறித்த தொகுப்பு தான் இது!

Advertisement

முதன்முதலில் பெடல் இல்லாத சைக்கிளே கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உருமாற்றம் பெற்று செயின், டிஸ்க் ப்ரேக்,
ஸ்பீடா மீட்டர் என பல்வேறு பரிமாணங்களை தாண்டி தற்போது செயின் இல்லாத சைக்கிள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ்வகை சைக்கிள்கள் திருச்சியில் தயாரிக்கப்படுகிறது என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

செயின் இல்லாத இந்த சைக்கிள்களை திருச்சியைச் சேர்ந்த STEED என்ற நிறுவனம் உருவாக்கி 5S என பெயரிட்டுள்ளது. இதில் செயினுக்கு பதிலாக propeller shaft எனப்படும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இவ்வகை சைக்கிள்களை தயாரித்துள்ளது. Shaft ன் இருமுனைகளிலும் பெடல் கியர் பொருத்தப்பட்டுள்ளது. பெடலை மிதிக்கும் போது கியர் இயங்கி சக்கரத்தை சுழல வைக்கிறது.
சைக்கிள் பாகங்கள் கவர் செய்யப்பட்டுள்ளதால் அடிக்கடி மக்கர் பண்ண வேலையும் இல்லை.
15 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பெடல் செய்துகொண்டே போகலாம் என்கின்றனர் அதன் வடிவமைப்பாளர்கள்.

3 கியர்கள் இந்த சைக்கிளில் டிஸ்க் பிரேக், சஸ்பென்ஷன் என பல வசதிகளை கொண்ட இவ்வகை சைக்கிள்கள் ரூ 22,000 முதல் 52000 வரை சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய...https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY