திருச்சி மாநகர் திருவரங்கம் பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் ஜூன் 9 மாலை 6 மணி யளவில் முத்துமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் பங்கேற்று அரசியல் விளக்க உரையாற்றினார். பகுதி குழு செயலாளர் பார்வதி ,மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சொக்கி சண்முகம் ,சீனிவாசன், கருணாகரன், வேலம்பால், சரசு, மூக்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

திருவானைக்காவல் பைபாஸ் புது செக்போஸ்ட் அருகில் உள்ள ஸ்கை மணமகிழ் மன்றத்தில் மதுப்பிரியார்களால் பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதோடு சாலையை கடக்கும் போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற மனமகிழ் மன்ற மதுக்கடையை மூடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவரங்கம் பகுதி குழு சார்பில் ஜூன் 15 காத்திருப்பு போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற திருவரங்கம் கோவில் கிழக்கு கோபுர வாசல் கடந்த ஐந்து வருட காலமாக பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.பணிகள் முடிவடையாமல் உள்ளதன் காரணத்தை அறநிலையத்துறையும் அறநிலையத்துறை அமைச்சர் பதிலளித்து விரைந்து பணிகள் முடித்து கோபுர வாசலை திறக்க கோரி அப்பகுதியிலேயே ஜூலை முதல் வாரத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

திருவரங்கம் பகுதி மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஒன்று முதல் ஐந்து வார்டுகள் வரையிலும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயண பிரச்சார இயக்கம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments