முகநூலில் உதவி கோரிய மாற்றுத்திறனாளி - நேரில் சென்று உதவிய காவல் உதவி ஆய்வாளர்!!

முகநூலில் உதவி கோரிய மாற்றுத்திறனாளி - நேரில் சென்று உதவிய காவல் உதவி ஆய்வாளர்!!

கொரோனா ஊரடங்கு தொடங்கி 5 மாதங்கள் ஆகிவிட்டன. இதில் அன்றாட வாழ்க்கையை கூட நடத்த பலர் இன்றளவும் திண்டாடி வருகின்றனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு என்பது ஒரு முழுமையான கேள்விக்குறியாக செய்து விட்டது இந்த கொரோனா. முகநூலில் தன்னிடம் உதவி கோரிய மாற்றுத்திறனாளிக்கு நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் திருச்சி காவல் உதவி ஆய்வாளர். இதை பற்றிய தொகுப்பு தான் இது!

திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக இருப்பவர் நாகராஜ். மனித நேயம் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் இவர்களைப் போல சிலரால் மட்டுமே என்பதே நிதர்சனம். கொரோனா ஆரம்பமானது முதல் பல்வேறு நல உதவிகளை வழங்கி வந்துள்ளார். சாலையில் தவித்த கர்ப்பிணியை கணவரிடம் சேர்த்ததும், அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்த பலரின் குடும்பங்களில் ஹீரோவாகவும் இருந்து வருபவர்.

Advertisement

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய முகநூலில் "தான் ஒரு மாற்றுத்திறனாளி. உங்களால் இயன்ற உதவிகளை செய்து என்னுடைய குடும்பத்தின் பசியைப் போக்கும்" என ஒருவர் மெசேஜ் அனுப்பி உள்ளார். இந்நிலையில் நாகராஜ் தன்னுடைய தொலைபேசி எண்ணை அவரிடம் கொடுத்துவிட்டு இன்று அவர் நேராக மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து உதவி காவல் ஆய்வாளர் நாகராஜிடம் பேசினோம்… திருச்சி மாவட்டம் இ.பி.ரோடு பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவர் என்னுடைய முகநூல் பக்கத்தில் உதவிகள் செய்து வருவதை பார்த்து தான் கொரோனா காலத்திலிருந்து எந்த ஒரு வேலைக்கும் செல்ல முடியாமல்

மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் தான் ஒரு மாற்றுத்திறனாளி என்றும் என்னுடைய குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது என தெரிவித்தார். நான் அவரை தொடர்பு கொண்டு பேசியபோது எனக்கு உணவுக்கு வழி செய்யுங்கள் என்றார்.

இந்நிலையில் இன்று அவருடைய வீட்டிற்கு நேரடியாக சென்று 15 கிலோ அரிசி, 2 கிலோ ரவை, 1 கிலோ கோதுமை, 2 கிலோ மைதா, 1 லிட்டர் எண்ணை, 1 கிலோ கடலை பருப்பு ஆகியவற்றை நேரில் சென்று வழங்கினேன். உடனே அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்" என்றார் புன்னகையுடன் நாகராஜ்

Advertisement

"அந்த மனசு தான் சார் கடவுள்" என திரைப்பட வசனம் போல அன்றாட வாழ்வில் ஹீரோவாக செயல்பட்டு வரும் திருவரம்பூர் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜுக்கு திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்கள்.