விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சி கடைகள் செயல்படுமா ?- மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

நாளை விநாயகர் சதுர்த்தியை விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியில் உள்ள ஆடு மாடு வதைக் கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்படும் என ஆணையர் சிவசுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதனையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரத் துவங்கியது. பின்னர் திருச்சி மாநகராட்சியின் பகுதியில் இயங்கும் ஆடு ,மாடு வதைக் கூடங்கள் மட்டும் செயல்படாது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு ஆணையர் செய்தியாளர்களிடம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆடு மாடு வதைக் கூடங்கள் மட்டும் செயல் படாது என்றும் மற்ற இறைச்சி கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் ஆணையர் தெரிவித்தார்.

ஏற்கனவே கோவிட் தொற்றால் ஞாயிற்றுகிழமைகள் முழு முடக்கம்.மேலும் மாநகராட்சி ஆணையர் உத்தரவால் திருச்சியில் இறைச்சி உண்பவர்கள் மத்தியில் சிறிது நேரத்தில் பரபரப்பு தொற்றி மீண்டும் அமைதி நிலைக்கு வந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய...https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP