மழைநீரில் மிதக்கும் NSB ரோடு

மழைநீரில் மிதக்கும் NSB ரோடு

தீபாவளி பண்டிகையின் இறுதிகட்ட விற்பனையில் திருச்சி என்எஸ்சி போஸ் ரோடு இன்று காலை மக்கள் கூட்டத்தில் மிதந்தது. ஆனால் சற்று நேரத்துக்கு முன்னதாக திருச்சியில் பெய்த கன மழையால் தற்பொழுது மழைநீரில் என்எஸ்சி போஸ் ரோடு மிதக்கிறது .

ஆங்காங்கே இருந்த பொதுமக்கள் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் கடைகளில் ஒதுங்கியும் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

என்எஸ்சி போஸ் ரோடு முழுவதும் மழை நீரால் தற்போது சூழ்ந்துள்ளது. தரைக்கடை வியாபாரிகள் இந்த மழையினால் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். இன்னும் சில மணி நேரங்களே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வருவார்கள் அதில் தங்களுக்கு வருமானத்தை ஈட்டலாம் என்று நினைத்த தரைக்கடை வியாபாரிகள் பொருட்கள் மழைநீரில் நனைந்து விட்டது.

Advertisement