திருச்சி மாநகராட்சி சார்பாக பட்டதாரிகளுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி - ஆணையர் அழைப்பு:

திருச்சி மாநகராட்சி சார்பாக பட்டதாரிகளுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி - ஆணையர் அழைப்பு:

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில்  சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் இளம் பட்டதாரிகள் / பட்டயதாரர்களுக்கு Internship பயிற்சி வழங்க மாநராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில்  சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் இளம் பட்டதாரிகள் / பட்டயதாரர்களுக்கு (The Urban Learning Internship Program - TULIP)  வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குள் வசிக்கும் இளம் பட்டதாரிகளுக்கு மாநகராட்சி சீர்மிகு திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளில் Internship பயிற்சி வழங்க BE / B.Tech (Civil, EEE, Computer Science), B.Arch., BBA, B.Sc(Horticulture), BCA and Diploma in Environmental Engineering பட்டப்படிப்பு/பட்டயபடிப்பு முடித்து 18 மாதங்களுக்குள் உள்ளவர்கள் www.internship.aicte-india.org என்ற இணையதளம் மூலம் 11.09.2020ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Advertisement

என்ற இணையதளம் மூலம் 11.09.2020ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இந்த அரிய வாய்ப்பினை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த இளம்பட்டதாரிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.