திருச்சி எம்ஜிஆர் சிலையை தனியாளாக சென்று துடைத்து மரியாதை செலுத்திய அமைச்சர்!

திருச்சி எம்ஜிஆர் சிலையை தனியாளாக சென்று துடைத்து மரியாதை செலுத்திய அமைச்சர்!

தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் திருச்சி மதுரை என அதிமுக அமைச்சர்களுக்குள் மிகப் பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. மதுரையை தான் இரண்டாவது தலைநகரமாக ஆக்க வேண்டும் என அமைச்சர்கள் செல்லூர் ராஜு ,உதயகுமார் தலைமையில் ஒரு படையினர் கோரிக்கைகளை முன்வைக்கும் நிலையில் எம்ஜிஆரின் கனவு திட்டமான திருச்சியைத் தலைநகராக மாற்ற வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஒரு படையினர் திருச்சி ஆக்க வேண்டும் என போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தி வரும் இந்த ஆபத்தான காலத்தில் இது தேவைதானா என சிலர் குரல் கொடுத்தாலும் வருகின்ற தேர்தலை சாதகமாக பயன்படுத்துவதற்காகவா அல்லது மக்களின் பயன்பாட்டிற்காகவா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்கிறார்கள்.

இந்நிலையில் இன்று திருச்சி கோர்ட் சாலை ரவுண்டானாவில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திடீரென தனியாளாக சென்று எம்ஜிஆரின் சிலையை துடைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார். தமிழகத்தின் தலைநகரை விவாதிக்கும் நேரத்தில் திடீரென எம்ஜிஆர் சிலைக்கு தனியாளாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று திருச்சி அதிமுக நிர்வாகிகள் காத்து இருக்கின்றார்கள்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய ‌https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP