புதுமணப்பெண் கொலையில் திருப்பம் - கணவர் கைது!

புதுமணப்பெண் கொலையில் திருப்பம் - கணவர் கைது!

சமயபுரம் அருகே நெ1 டோல்கேட் பகுதியில் உள்ள வாழவந்தபுரத்தைச் சேர்ந்த அருள்ராஜ் மனைவி கிருஷ்டி ஹெலன்ராணி(26) என்ற பெண் திருமணமான ஒரே மாதத்தில், அதே பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கொலை செய்யப்பட்டார். கொள்ளிடம் ஆற்றில் தேங்கியுள்ள குட்டை நீரின் கரையோரத்தில் உடலில் எவ்வித துணியுமின்றி சடலமாக காணப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி உள்ளது தெரியவந்தது. தேடிச் சென்றவர்கள் சடலத்தை பார்த்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லால்குடி டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து புதுப் பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே வேளையில் பெண்ணின் கணவர் அருள்ராஜையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisement

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் கணவர் அருள்ராஜ் கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கணவர் தாம்பத்தியத்தில் ஈடுபட கொள்ளிடம் ஆற்றிற்கு அழைத்து சென்ற போது, தன்னை உதாசீனம் படுத்தியதால் கொள்ளிடம் ஆற்றின் நீரில் அமுக்கி கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

கொலை சம்பவத்தை மறைக்க மனைவி அணிந்திருந்த நகைகள், கொலுசு ஆகியவற்றை அருள்ராஜ் அப்பகுதியில் மண்ணில் புதைத்து வைத்திருந்தார். நகை, கொலுசுவையும் போலீஸார் அப்பகுதியிலிருந்து கைப்பற்றினார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.