தமிழக அரசு இரண்டு கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே தனியார் பேருந்துகள் ஓடும் - இல்லையெனில் ஓடாது!

தமிழக அரசு இரண்டு கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே தனியார் பேருந்துகள் ஓடும் - இல்லையெனில் ஓடாது!

தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கம் குறித்து கலந்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இது ஆன்லைன்(zoom app) மூலம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு தனியார் பேருந்து இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் இன்னும் எவ்வளவு பயணிகளை பேருந்தில் பயணிக்க அனுமதிப்பது பற்றிய தகவல்களை தெளிவாக அரசு தெரிவிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

இக்கூட்டத்தின் முடிவில் தமிழக அரசிடம் இரண்டு கோரிக்கைகளை வைத்துள்ளனர். மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகளை இயக்க அனுமதி கொடுத்தால் தனியார் பேருந்துகள் நாளை முதல் இயங்கும் எனவும் 100 சதவிகித இருக்கைகளை அனுமதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

இரண்டு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் காத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அறிவித்தால் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் இல்லை என்றால் இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் தர்மராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.