சமயபுரம் ஆடு வாரச் சந்தையில் கடந்த ஆண்டை விட பாதியாக குறைந்த ஆடு விற்பனை.

சமயபுரம் ஆடு வாரச் சந்தையில் கடந்த ஆண்டை விட பாதியாக குறைந்த ஆடு விற்பனை.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள  இடத்தில்  பிரதி வாரம் சனிக்கிழமை ஆடு வாரச் சந்தை நடைபெற்று வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 6 மாதத்திற்கு மேலாக வாரச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த வாரச் சந்தைக்கு திருச்சி மட்டுமில்லாது துறையூர்,முசிறி மண்ணச்சநல்லூர், லால்குடி,வெளி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகள் வளர்ப்பவர்களும் ,வியாபாரிகளும் வந்து ஆடுகளை விற்பனை  செய்து வருகின்றனர். அதேபோல்  இங்கு விற்பனை செய்யும் ஆடுகளை வாங்குபவர்களும் திருச்சி மட்டுமன்றி அரியலூர், பெரம்பலூர்,திண்டுக்கல், மதுரை ,ராமநாதபுரம்,பாண்டிச்சேரி  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இன்று சமயபுரம் வாரச் சந்தையில் வழக்கத்தினை விட அதிகளவில் வர்த்தகம் நடைபெறும் என்ற நிலையில்  ஆடுகளை வரத்து மிகவும் குறைவாகவே காணப்பட்டது..

இதனால் வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற இந்த சமயபுரம் ஆடு வாரச் சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்ற நிலையில் இன்று ஆடுகள் வரத்து குறைவால் வர்த்தகம் மந்நமாகவே காணப்பட்டது இதனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆடு விற்பனை பாதியாக குறைந்துள்ளது எனவும், கொரோனா காலங்களில் ஆட்டு வாரச்சந்தை திறக்காத தால், ஆடு வளர்ப்போரிடம் ஆடு வியாபாரிகள் நேரிடையாக ஆடுகளை வாங்கும் நிலை ஏற்பட்டதால் சந்தைக்கு வரும் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் இன்று ஆடு விற்பனை மிகவும் மந்தமாக இருந்த்து என்றனர் வாரச் சந்தையினை ஏலம் எடுத்தவர்கள்

  :