ஒரு மாதகாலமாக திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை!

ஒரு மாதகாலமாக திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை!

திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் சாலை புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சியின் முக்கிய பகுதிகளான சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு உறையூர், தில்லைநகர் மற்றும் பல பகுதிகளில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங் யூனிட் சாலையில் கடந்த மாதங்களில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வந்தது. அன்று திறக்கப்பட்ட சாக்கடை குழி இன்றுவரை மூடாமல் உயிர் காவு வாங்கக் காத்திருக்கிறது.

மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் குடியிருப்புகள் இருக்கும் இந்த பகுதியில் இதனை கடந்து செல்ல வேண்டும். ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரியும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு சீர் செய்யவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement