திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்காவிடில் போராட்டம் அறிவிக்கப்படும் - வியாபாரிகள் கூட்டமைப்பினர் பேட்டி!

திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்காவிடில் போராட்டம் அறிவிக்கப்படும் - வியாபாரிகள் கூட்டமைப்பினர் பேட்டி!

திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்காவிட்டால் போராட்டம் அறிவிக்கப்படும் என வணிகர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு பேட்டி கொடுத்துள்ளார்..

இதுகுறித்து அவர் கூறுகையில்…" திருச்சியை இரண்டாவது தலைநகரம் ஆக்கவேண்டும் என்பது எம்ஜிஆரின் கனவு. ஆனால் மதுரை இரண்டாவது தலைநகரம் என்று கூறி வருவது, அவரின் கொள்கையை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம். ஜாதி, மத கலவரம் இல்லாத பூமி திருச்சி. கொரோனா காலகட்டத்தில் இரண்டாவது தலைநகரம் பேச்சை ஏன் அமைச்சர்கள் எடுக்க வேண்டும்? என்பதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். ஓரிரு வாரங்களில் அனைத்து கட்சி உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டக் குழு அமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Advertisement

திருச்சியை இரண்டாவது தலைநகரம் என்று அறிவிக்காத கட்சி ஆட்சி கட்டிலில் அமர முடியாது. இது குறித்து திருச்சியை சேர்ந்த இரு அமைச்சர்கள் பேசாதது மன வருத்தம் அளிக்கிறது. எதையோ மறைக்க இந்த பிரச்சினை எழுப்பப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது என்று அவர் கூறினார்.

https://trichyvision.com/backup/the-second-capital-of-tamil-nadu-trichy-madurai/

இதற்கு திருச்சியில் உள்ள இரண்டு அமைச்சர்கள் எந்த பதிலும் அளிக்காது மிகப்பெரிய வருத்தமாக உள்ளது" என்றார். பேட்டியின் போது, கூட்டமைப்பு தலைவர் தமிழ்ச்செல்வம், பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.