எரியூட்டும் மைதானத்திற்கு அருகே ஆண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை - ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை!

எரியூட்டும் மைதானத்திற்கு அருகே ஆண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை - ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை!

திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள எரியூட்டு மைதானத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக திருச்சி ஸ்ரீரங்கம் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் அந்த பகுதியில் மது பாட்டில்களை தேடி எடுத்து விற்பனை செய்பவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா வேறு ஏதும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.