தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்!

திருச்சியில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் தினக்கூலி 380 வழங்க வேண்டும் என்றும், பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்ட தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாயில், கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement