தெருவில் குப்பை கொட்டாமல் இருக்க பொதுமக்களுக்கு வாழ்த்துக்கூறும் தூய்மை பணியாளர்கள்

தெருவில் குப்பை கொட்டாமல் இருக்க பொதுமக்களுக்கு வாழ்த்துக்கூறும் தூய்மை பணியாளர்கள்

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே வீடுகளைத் தேடி குப்பை வண்டிகள் மூலம் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். அதையும் தாண்டி பொதுமக்கள் தெருக்களில் குப்பைகளை கொட்டி அசுத்தம் ஏற்படுத்துவது நிகழ்ந்து கொண்டிருந்தது .இதனை உடனடியாக சரி செய்வதற்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் மாநகராட்சி ஊழியர்கள் 41வது வார்டில் K.K.நகர் ரெங்கா நகர் 3 வது தெருவில் குப்பையாக கிடந்த இடத்தை சுத்தம் செய்தனர்.

மாநகராட்சி மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும்  தூய்மை பணியாளர் சேர்ந்து தெருவை சுத்தம் செய்து மீண்டும் பொதுமக்கள் அந்த இடத்தில் குப்பைகளை கொட்டாமல் இருக்க தீபாவளி வாழ்த்து தெரிவித்து கோலம் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .இதன் மூலம் பொதுமக்கள் அந்த இடத்தில் மீண்டும் குப்பைகளை கொட்டாமல் இருக்கும் மனநிலை உருவாகி உள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.