திருச்சி அமைப்பினர் செங்கல்பட்டில் 4 நாட்கள் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்!

திருச்சி அமைப்பினர் செங்கல்பட்டில் 4 நாட்கள் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்!

கோவிட் பெருந்தொற்று நாடு முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகமான பாதிப்புகள் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியை சேர்ந்த எம்பவர் டிரஸ்ட் அமைப்பினர் செங்கல்பட்டில் நான்கு நாட்கள் சென்று அங்குள்ள மக்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வு நடத்தி பிரச்சாரம் செய்துள்ளனர் இதை பற்றிய தொகுப்பு தான் இது!

தமிழக அரசுடன் திருச்சி  EMPOWER TRUST, மற்றும் HABITAT FOR HUMANITY INDIA இணைந்து கொரோனா வைரஸ்  பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியுள்ளனர். இப்பிரசாரம் 24.08.2020 முதல் 27.08.2020 வரை செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊரப்பாக்கம் பஞ்சாயத்து மற்றும் வண்டலூரில் துண்டு பிரசுரங்கள், முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் EMPOWER TRUST மற்றும் HABITAT FOR HUMANITY INDIA  சார்பில்  புஷ்ப பாரதி, காயத்ரி, சில்வியா எலிசபெத், மற்றும் நிஷா ஆகியோரும்  தன்னார்வலர்கள் பலரும்  கலந்துகொண்டனர். 

Advertisement

இவர்களுக்கு காட்டாங்குளத்தூர் நகர பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் லீமா ரோஸ் பொது மக்களிடம் எப்படி பணியாற்ற வேண்டும், முகக் கவசம் முக்கியத்துவம், கபசுரக் குடிநீர் அருகுவதன் அவசியம், இலவச மருத்துவ  முகாமில் மக்கள் பங்கு கொள்வதின் அவசியம் பற்றிய பயிற்சியை வழங்கினார். 

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் கிளார்க் கருணாகரன் ஆகியோரின் வழிகாட்டுதலின்  அடிப்படையில் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று கொரோனா வைரஸ் பற்றிய துண்டு பிரசுரங்கள், ஊரப்பாக்கதிலுள்ள பிரியா நகர், மூகாம்பிகை நகர் பெரியார் நகர் அபிராமி நகர், பகுதி - 1, 2 & 3, வா.வு. சி நகரில் அமைந்துள்ள ஆறு தெருக்களிலும், கட்டபொம்மன் கன்னி அம்மன் கோவில் தெருக்களிலும் வழங்கினார்கள்.  அதனை தொடர்ந்து கபசுரக் குடிநீரும் மற்றும் முக கவசமும்  வழங்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ஊரப்பாக்கதில் இரண்டு மருத்துவ முகாம்கள் மற்றும் வண்டலூரில் ஒரு மருத்துவ முகாம் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டது. அதில் தன்னார்வலர்கள் பொதுமக்களை கலந்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
இறுதியாக, EMPOWER TRUST நிர்வாக இயக்குநர், முனைவர் கனிமொழி மற்றும் HABITAT FOR HUMANITY INDIA, இயக்குநர், அரசு தொடர்பு மற்றும் வீடு சேவைகள் பிரிவு, சாமுவேல் பீட்டர் இணைந்து கொரோனா வைரஸ்  பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக அரசுடன் இணைந்து ஒருங்கிணைத்தார்கள்.