தேசியக் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடிய திருச்சி மக்கள்!

தேசியக் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடிய திருச்சி மக்கள்!

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே ஹாக்கி விளையாட்டில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்தது. தன் அசாத்தியமான ஹாக்கி பந்தை கையாலும் திறனைக் கண்டு இவரை மந்திரவாதி என்று கூட அழைத்தனர். இவர் தன்னுடைய சர்வதேச போட்டிகளில் 400 மேற்பட்ட‌ கோல்களை அடித்தவர். 1928ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 14 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆம் இவ்வளவு பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர் ஹாக்கியை இந்தியாவில் தலை தூக்கி நிறுத்தியவர். இவருடைய தலைமையில் மூன்று முறை தங்கம் வென்று தந்தவர் ஹாக்கியின் நாயகன் "தயான் சந்த்''.

ஹிட்லரை கண்டு நாம் வியந்து இருப்போம், ஆனால் ஹிட்லரே இவரைப் பார்த்து வியந்தாராம்.1936ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவும் ஜெர்மனியும் ஹாக்கியில் மோதியது. இந்த இறுதி போட்டியினை ஹிட்லர் வியந்து பார்த்துக் கொண்டிருந்தாராம். இறுதியில் இந்தியா தயான் சந்தின் அதிரடியான ஆட்டத்தால் வென்றது. இதனை கண்ட ஹிட்லர் தயான் சந்துக்கு ஜெர்மனி நாட்டின் குடியுரிமை, மேஜர் பதவி உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கியுள்ளார். ஆனால் அவை அனைத்தையும் அமைதியாக மறுத்துவிட்டார். இந்திய நாட்டையே ஹாக்கியில் உயர வைத்த தயான் சந்த் பற்றிய "கோல்" என்னும் புத்தகத்தை 1952 ஆம் ஆண்டு தற்போதைய சென்னையில் வெளியிட்டுள்ளனர்.

ஒருமுறை தயான் சந்தின் ஹாக்கி மட்டையில் காந்தம் உள்ளதா என கூட உடைத்து பார்த்தனராம். இவ்வளவு பெருமைகளுக்கும் சொந்தக்காரர் இந்தியா மறந்துவிட முடியாத மாமனிதர்.

Advertisement

இந்நிலையில் இவரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் திருச்சியின் நூற்றாண்டு பாரம்பரியமிக்க தேசிய கல்லூரியில் தயான் சந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் வகையில் காலையில் திருச்சியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசிய விளையாட்டு தினம் உறுதிமொழியும் அதன்பிறகு மைதானத்தினை சுற்றி‌ ஓடி வந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடினர்.இதுபோல இந்தியா முழுவதும் பல இடங்களில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஐபிஎல் கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ், திருச்சி காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சந்திரகுமார், எம்.ஏ.எம் கல்லூரி டாக்டர் மாலுக், தேசியக் கல்லூரி உடற்கல்வித் துறை தலைவர் பிரசன்னா பாலாஜி, ஜமால் முகமது கல்லூரி உதவிப் பேராசிரியர் குணசீலன் மற்றும் கல்லூரி மாணவர்கள் திருச்சியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.