தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வெளியானதுடன் அன்றையதினம் முதல் தேர்தல் நடத்தை விடுமுறைகள் அமலுக்கும் வந்தது.அதே நேரம் கடந்த மார்ச் 30ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் ஆறாம் தேதியான நேற்று பிற்பகல் மூன்று மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சிமேற்கு, மணப்பாறை, லால்குடி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர் மற்றும் திருவெறும்பூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 276 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.அதிகபட்சமாக திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 39 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக முசிறி சட்டமன்ற தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் ஜோசப் விஜய் ,திமுக வேட்பாளர் இனிகோ,அதிமுக ராஜசேகரன்,நாதக மருத்துவர் கிருஷணசாமி உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் பரிசீலனை மாநகராட்சி மண்டலம் எண் 2ல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியன்
முன்பு நடைபெற உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
திருச்சி கிழக்கில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் வேட்புமனு இன்று பரிசீலனை



Comments