தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தாளை மறுநாள் (13.09.2025) திருச்சி மரக்கடையில் மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபடுகிறார். இந்த இடம் திருச்சி கிழக்கு தொகுதி தொகுதிக்கு உட்பட்டது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார் என்று புதிய பீதியை கிளப்பி உள்ளனர்.
ஏனென்றால் தமிழ்நாட்டில் முதல் தொகுதியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பரப்புரை செய்ய இருக்கும் இடம் மரக்கடை திருச்சி கிழக்கு தொகுதி. திருச்சி கிழக்கு தொகுதிக்கு மிகப்பெரிய ராசி ஒன்று இருக்கிறது. இதற்கு முன்னால் இருந்த திமுக முக்கிய பிரபலங்கள், அதிமுக அமைச்சர்கள் என பல பேரை இந்த தொகுதி கண்டுள்ளது.
கம்யூனிஸ்ட், திமுக, மதிமுக, அதிமுக என கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களை எம்எல்ஏ, மந்திரியாக்கி அழகு பார்த்தது இந்த திருச்சி தொகுதி. ஆனால் இந்த திருச்சி தொகுதியைப் பொறுத்த அளவு அரசியல்வாதிகளுக்கு ஒரு ராசி என்பது இருக்கிறது. இதில் போட்டியிட்டு வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர் மறுமுறை போட்டியிடுவது ஒரு சிலரை தவிர யாருக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. அந்த வாய்ப்பில் திமுகவில் பரணி குமார் மறுமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றார் .ஆனால் இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று அதன் பிறகு அவர்களுடைய அரசியல் வாழ்க்கை ஜொலித்தது கிடையாது. சாதாரணமாக ஒரு கட்சியில் தொடர்ந்து இருப்பார்கள். ஆனால் அடுத்த அடுத்த படிகளில் உயர்ந்து கட்சியிலும் முக்கிய மந்திரி பதவி துறைகளையும் பெற்று வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. அதற்கு ஏராளமான சாட்சிகள் உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் ஒருவர் ஒருமுறை போட்டியிட்டால் அவருக்கு அதோடு அவருடைய அரசியல் வாழ்க்கை பெரிய அளவில் பிரகாசமாகாது அஸ்தமனமாகும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுவார்கள். இப்படி ராசிக்கு மேல் ராசியாகஉள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார் என்று புது பரபரப்பை கிளப்பி உள்ளனர்.
திருச்சி தொகுதியை பொறுத்த அளவு சிறுபான்மையினர் வாக்குகள் ஒரு வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை இருந்தாலும் கிழக்கு தொகுதியை நன்றாக அரசியலில் வளர்ந்த முக்கிய பிரபலமாக இருப்பவர்கள் போட்டியிட விரும்ப மாட்டார்கள். அப்படி ராசியான திருச்சி கிழக்கு தொகுதியில் தற்பொழுது த.வெ.க தலைவர் விஜய் போட்டியிடுகிறார் என்று கிளப்பி உள்ள தகவல் போக போக தான் தெரியும். அவர் திருச்சி கிழக்கு தொகுதியை தேர்ந்தெடுக்கிறாரா அல்லது வேறு ராசியான தொகுதியில் போட்டியிடப் போகிறாரா என்பது வரும் நாட்களில் தெரியும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments