திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஆதரவாக Omega Healthcare Management Services Pvt Ltd நிறுவன ஊழியர்கள் சார்பில் ரூ.1,00,000 மதிப்பிலான கல்வி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன.
நிகழ்வில் Omega Healthcare Management Services Pvt Ltd மனிதவள மேலாண்மை இயக்குனர்
ஆண்டனி ஈப்பன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், போசம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 5 எஸ்-டைப் ஸ்டீல் நாற்காலிகள், 2 ஆசிரியர் மேசைகள் மற்றும் மாணவர்களுக்கான நூலக பயன்பாட்டிற்கான ஒரு பீரோ ஆகியவை ரூ.40,000 மதிப்பில் வழங்கப்பட்டது. மேலும் ரூ.5,000 மதிப்பிலான எழுதுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து குழுமணி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.5,000 மதிப்பிலான நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும் இன்று பெட்டவாய்த்தலை ரத்னா மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்களுக்கான 8 ஸ்டீல் மேசை-நாற்காலிகள் ரூ.40,000 மதிப்பில் வழங்கப்பட்டதுடன், ரூ.10,000 மதிப்பிலான நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுதுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
மொத்தமாக ரூ.1,00,000 மதிப்பிலான இந்த கல்வி உதவி, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
சமூக பொறுப்புணர்வுடன் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் Omega Healthcare Management Services Pvt Ltd நிறுவன ஊழியர்களின் இந்த செயலை ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம பொதுமக்கள் பாராட்டினர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments