பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டகரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளான இராட்சாண்டர்திருமலையில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான தேசிய ஜனநாயக கூட்டணி பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில்…… நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் 5 ஆண்டுகளில் தொகுதி மக்கள் சுமார் 1500 குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் உயர் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை இலவசமாக செய்து கொடுப்பேன். அரியலூர் – பெரம்பலூர் – துறையூர் – நாமக்கல் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

பிரசாரத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் பொது ச்செயலாளர் ஜெயசீலன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், சத்தியநாதன், குளித்தலை தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாநில துணைத்தலைவர்கள் நெல்லை ஜீவா, இளவரசி, கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ்கண்ணா மாவட்ட செயலாளர் பிச்சை, ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார்,

கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மாவட்ட கூட்டுறவு துறை துணைத் தலைவர் குளித்தலை சுந்தர் ஜி. தோகைமலை கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜாபிரதீப், மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ் என்கின்ற பிரபு, அவைத் தலைவர் துரைமுருகன்,

மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயசேகரன், குளித்தலை நகர செயலாளர் பிரகாஷ், தோகைமலை ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் நடராஜ், அம்மா பேரவை வசந்த் பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 29 March, 2024
 29 March, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments