Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

லால்குடியில் 107.750 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது!

லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கரையூர்
பகுதியில் உள்ள
பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை
செய்யப்படுவதாக 16.05.2026 அன்று லால்குடி காவல் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் படி
லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் மேற்படி பகுதிகளில் உள்ள கடைகளில்
சோதனை மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில், செங்கரையூர் பகுதியை சேர்ந்த நிவாஸ் 41/26, த.பெ கோவிந்தராஜ், கள்ளர் தெரு,
செங்கரையூர், லால்குடி வட்டம் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்த போது
கடையின் உரிமையாளரான நிவாஸ் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாகவும் கடைக்குள் இருந்த
சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது சுமார் 107.750 கிலோ மதிப்பிலான ஹான்ஸ்
மூட்டைகள் கைப்பற்றப்பட்டது.
மேலும், எதிரி நிவாஸ் என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவர்
மேற்படி குட்காவை அவரது நண்பர் ராஜா 28/26, த/பெ சுபாஷ், ரெங்கா கார்டன், பட்டர் பிள்ளையார்
கோயில் தெரு, மேலூர், ஸ்ரீரங்கம் வட்டம் என்பவருடன் சேர்ந்து விற்பனை செய்வதாக கூறியதன்
பேரில் எதிரிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், லால்குடி காவல் நிலைய குற்ற எண். 192/26, U/s U/s. 123, 275 BNS r/w 6,
24(1) COTPA Act ன் படி 16.03.2026 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் 1) நிவாஸ் (41), த.பெ
கோவிந்தராஜ், கள்ளர் தெரு, செங்கரையூர், லால்குடி, திருச்சி மாவட்டம், 2) ராஜா (28), த.பெ சுபாஷ்,
ரெங்கா கார்டன், பட்டர் பிள்ளையார் கோயில் தெரு, மேலூர், ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சி மாநகரம்
என்பவர்கள் (16.05.26) நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேற்படி சட்டவிரோத விற்பனைக்காக வைக்கபட்டிருந்த குட்காவை கைப்பற்றிய லால்குடி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருச்சி மாநகர காவல் துணை ஆணையர், சிருஷ்டி சிங், இகா.ப, சட்டம் மற்றும் ஒழுங்கு (தெற்கு), திருச்சி மாநகரம். (பொ) திருச்சிராப்பள்ளி மாவட்டம் அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *