திருச்சியில் 126 அரிய வகை பட்டாம்பூச்சி இனங்கள் பதிவு - மாவட்ட வன அலுவலர் தகவல்

திருச்சியில் 126 அரிய வகை பட்டாம்பூச்சி இனங்கள் பதிவு - மாவட்ட வன அலுவலர் தகவல்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சைமலைப் பகுதிகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பட்டாம்பூச்சி இனங்களின் கணக்கீடு பணி நடைபெற்றது. அதில் 126 பட்டாம்பூச்சி இனங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வானது திருச்சி வண்ண மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பெரியசாமி அறிவுறுத்தலின்படி நடைபெற்றது.

இந்த ஆய்வை இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (TNBS) நிறுவனம் மேற்கொண்டது. கோயம்புத்தூர், சென்னை, சேலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்களில் செங்காட்டுப்பட்டி விரிவாக்க ஆர்.எப், காளியம்மன் கோவில் திட்டு ஆர்.எப், சோலைமத்தி ஆர்.எப், கன்னிமார் சோலை ஆர்.எப், மேலூர் ஆர்.எப், சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா பகுதி (மேல் செங்காட்டுப்பட்டி) மற்றும் மங்களம் அருவி போன்ற பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வு செய்யப்பட்ட பகுதிகள் உலர் மற்றும் ஈரத் தன்மை கொண்ட இலையுதிர் காடுகளாகும். இவற்றுடன் ஆறுகள் பாயும் காடுகள் மற்றும் இரண்டாம் நிலைக் காடுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வு 2024 டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் துறையூர் வன அலுவலகம் மற்றும் அதன் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வின் முடிவுகள் தமிழ்நாடு வனத்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளன.

Banded Royal (Rachana jalindra) எனப்படும் பட்டாம்பூச்சி பதிவு செய்யப்பட்டது. இது தமிழ்நாட்டின் கிழக்கு மலைப்பகுதிகளில் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே காணப்படும் நீலம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை பட்டாம்பூச்சி ஆகும். இது இந்திய வனப்பாதுகாப்பு சட்டம், 1972ன் அட்டவணை 2-ல் இடம்பெற்று சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுக்கப்பட்ட 126 இனங்கள் கீழ்க்காணும் 6 பட்டாம்பூச்சி குடும்பங்களைச் சேர்ந்தவை. (Swallowtails): 9 புல்வெளியாள்கள், நுனிச்சிறகன்கள், வெள்ளையன்கள் (Whites & Yellows): 18 வரியன்கள், சிறகன்கள், வசீகரன்கள் (brush-footed Butterflies):37 நீலன்கள் (Blues):35 ,2 (Metalmarks): 1 தாவிகள், துள்ளிகள் (Skippers): 26 அரிய வகை பட்டாம்பூச்சிகளான பருபலா வெள்ளையன், சிறிய மஞ்சள் புல்வெளியாள், ஜூடி, காட்டுக்களா சிறகன், நான்கு வளையன், சிறிய பரப்பி போன்ற இனங்கள் மலைப்பகுதிகளில் பரவலாக காணப்பட்டன.

நீல அழகி, மயில் அழகி, மஞ்சள் அழகி, நாடோடி, கருப்பு நாடோடி, கண்ணாடி வரியன், ஆரஞ்சு வரியன், ஆமணக்கு சிறகன், வெண்கருப்பு சிறகன், சாம்பல் மின்னி, நாமத்தாவி, மற்றும் வயல் துள்ளி போன்ற பட்டாம்பூச்சிகள் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்பட்டன. ஆற்றுப் பகுதிகளில் இரட்டை வால் சிறகன் மற்றும் அந்திச்சிறகன் போன்ற பட்டாம்பூச்சிகள் மரத்தில் இருந்து வடியும் பாலை உண்ணும் காட்சிகள் பதிவானது.

பச்சை மலையில் 2016 மற்றும் 2022-ல் நடத்தப்பட்ட ஆய்வுகளில் முறையே 105 மற்றும் 109 இனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தற்போது மொத்தமாக 149 பட்டாம்பூச்சி இனங்கள் பதிவாகியுள்ளன. தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் 175 இனங்கள் வரை பதிவுசெய்யும் வாய்ப்பு உள்ளது என மாவட்ட வண அலுவலர் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision