திருச்சி மாநகரில் 126 இருசக்கர வாகனங்கள் ஏலம்

திருச்சி மாநகரில் 126 இருசக்கர வாகனங்கள் ஏலம்

திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு கைப்பற்றப்பட்ட 126 இருசக்கர வாகனங்களை அரசுடமை ஆக்குவதற்கு மாவட்ட அரசிதழில் செய்தி வெளியிடப்பட்டு, மேற்படி 126 வாகனங்களை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என்பதால்,

மேற்படி 126 வாகனங்களை அரசுடமையாக்கப்பட்டு, மேற்படி வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்யும் பொருட்டு விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கும் வகையில் (07.12.23)-ந் தேதி எலம் விடப்படும் என்ற செய்தியை குறிப்பிட்டு முன் கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று (07.12.2023)-ம் தேதி, திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில், திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, தலைமையில் மேற்கண்ட 126 இருசக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டன. இந்த ஏலத்தில் 149 நபர்கள் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுத்தனர். இதன் மூலம் பெறப்பட்ட விற்பனை தொகையான ரூ.11,37,472/-யை (GST வரிகள் உட்பட) அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision