முசிரியில் 14 வயது சிறுமி கர்ப்பம் - சிறுவன் உள்பட இருவர் கைது

முசிரியில் 14 வயது சிறுமி கர்ப்பம் - சிறுவன் உள்பட இருவர் கைது

திருச்சி மாவட்டம் முசிரியில் தந்தையை இழந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்களுக்கு தகவல் சென்றது. இதையடுத்து முசிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் காவிரியிடம் சமூக நல ஆர்வலர்கள் புகார் செய்தனர். இதையடுத்து சிறுமியின் இருப்பிடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் சமூக நல அலுவலர்கள் சிறுமியின் தாய் மற்றும் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் முசிரி பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (21),  தொட்டியம் தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்த பாபு (21) உள்ளிட்டோர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்துவாலிபர் ரத்தினவேல் மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பாபு என்ற  வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கர்ப்பிணியாக இருக்கும் சிறுமி முசிரி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn