கோவிலில் காணாமல் போன 2 சிலைகள் 29 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுடெடுப்பு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி
நாகையில் தாளரனேஸ்வரர் கோவிலிருந்து காணாமல் போன ஆடிப்பூர அம்மன் மற்றும் விநாயகர் சிலைகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் திருமருகல்கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து உள்ளனர். இதுகுறித்து, டிஜிபி சைலேந்திரபாபு திருச்சி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது.. நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே சன்னியாசி பணங்குடி கிராமத்தில் உள்ள தாளரனேஸ்வரர் கோவிலில், கடந்த 1992ம் ஆண்டு,ஆடிப்பூர அம்மன் உலோக சிலை, மணி, வெண்கல குடம், செம்பு கலசம், நாகாபரணம் போன்றவை திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திட்டச்சேரி போலீசார் 1993ம் ஆண்டு அதை கண்டுபிடிக்க முடியாத வழக்காக முடித்தனர்.
கடந்த 2017ம் ஆண்டு, பல்வேறு மாவட்டங்களில் கண்டுபிடிக்க முடியாத சிலை திருட்டு வழக்குகள் உட்பட அனைத்து சிலை திருட்டு வழக்குகளும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதில், தாளரனேஸ்வரர் கோவிலில் நடந்த திருட்டு வழக்கும் சேர்க்கப்பட்டு, கூடுதல் எஸ்.பி., ராஜாராம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அப்போது 29 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஆடிப்பூர அம்மன் சிலை, விநாயகர் சிலை போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பழைய ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஆடிப்பூர அம்மன் சிலையும், வழிபாட்டில் இருந்த விநாயகர் சிலையும் பாதுகாப்பு கருதி, திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டது தெரியவந்தது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சிலைகளை, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இது தவிர, 110 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற தொன்மையான எட்டுகை விஷ்ணு சிலை சிவன் விநாயகர் நடராஜர் சிலைகளையும் தனிப்படை போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
அதேபோல் மேல்மருவத்தூரில் மீனாட்சி அம்மன் சிலை, ரிஷபதேவர் மற்றும் கிருஷ்ணர் சிலைகளை ஒரு கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 17 சிலை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 39 சிலைகள், பல்வேறு வெளிநாடுகளில் அருங்காட்சியகம் மற்றும் கலை கூடங்களில் அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழக டிஜிபி தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn